கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x

தேனியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்

தேனி

தேனி அரண்மனைப்புதூர் விலக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 600 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

----


Next Story