கஞ்சா வைத்திருந்த3 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பர்கிட் மாநகரம் பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 24) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 2 பேர் என்பதும் அவர்கள் விற்பனை செய்ய கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story