தமிழகத்தில் 2 புதிய துறைமுக திட்டங்கள் அமைய வாய்ப்பு;மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் பேட்டி


தமிழகத்தில் 2 புதிய துறைமுக திட்டங்கள் அமைய வாய்ப்பு;மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் பேட்டி
x

தமிழகத்தில் 2 புதிய துறைமுக திட்டங்கள் அமைய சாத்தியம் உள்ளதாக மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

தமிழகத்தில் 2 புதிய துறைமுக திட்டங்கள் அமைய சாத்தியம் உள்ளதாக மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி பேட்டி

குமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய சுற்றுலாத்துறை மற்றும் துறைமுகங்கள் துறை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

புதிய துறைமுக திட்டங்கள்

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு மட்டும் தற்போதைய பட்ெஜட்டில் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறைக்கும் நிதி பகிர்ந்தே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்றிரண்டு புதிய துறைமுக திட்டங்கள் நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளது. தமிழகத்தில் சுற்றுலா திட்டங்களை பொறுத்தவரையில் மாநில அரசு எந்த திட்டங்களையும் மத்திய அரசிடம் கேட்கவில்லை. மாநில அரசு சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தால் அதை ஆய்வு செய்து நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 76 திட்டங்களில் 50 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எங்களை பொறுத்தவரையில் மாநில அரசு சுற்றுலா திட்டங்களை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story