தர்மபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் பழனி முருகன் கோவில் பிரசாதம் வினியோகம்-அதிகாரி தகவல்


தர்மபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் பழனி முருகன் கோவில் பிரசாதம் வினியோகம்-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:19+05:30)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பழனி தண்டாயுதபாணி கோவில் பிரசாதத்தை அஞ்சல் வழியில் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.250 செலுத்தி பழனி பஞ்சாமிர்தம், சாமி படம், பிரசாதம் (திருநீர்) பெற்று கொள்ளலாம். தர்மபுரி கோட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் 30 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடக்கிறது. பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்வார்கள். பழனி கோவிலுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் அஞ்சலகங்களில் விண்ணப்பிப்பதன் மூலம் பழனி பிரசாதம் விரைவு தபால் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தர்மபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களை அணுகி உரிய தொகையை செலுத்தி பதிவு செய்து பிரசாதம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story