மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்தது


மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்தது
x

மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்தது

திருவாரூர்

மன்னார்குடியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அப்போது எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதியான மேல ராஜாவீதி பெரியார் சிலை சந்திப்பில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் அந்த கம்பத்தின் இடையே சிக்கியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். சாலை நடுவே இருந்த மின்விளக்கு கம்பம் துருப்பிடித்து வலுவிழந்து இருந்ததால் காற்றில் முறிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறிந்து விழுந்த மின் விளக்கு கம்பத்தை போலீசார் அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.


Next Story