கல்லூரியில் முதுகலை பயில கலந்தாய்வு கூட்டம்


கல்லூரியில் முதுகலை பயில கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:37+05:30)

சுரண்டை அரசு கல்லூரியில் முதுகலை பயில கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது

தென்காசி

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அ.பீர்க்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.காம். ஆகிய முதுகலை முதலாம் ஆண்டு பயில விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளும் மேற்கண்ட நாட்களில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வருகை தந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.Next Story