திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் பிரேத பரிசோதனை கூடம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்நவீன வசதிகளுடன் பிரேத பரிசோதனை கூடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையொட்டி இங்கு தரைத்தளம் உள்பட 5 மாடிகள் கொண்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், சமையல் கூடம், பிரேத பரிசோதனை கூடம் உள்பட பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய பிரேத பரிசோதனை கூட கட்டிட பணிகள் நிறைவு பெற்றது. இதையொட்டி பிரேத பரிசோதனை கூடம் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கூடத்தில் 24 பேரின் இறந்த உடல்களை குளிர்சாதன வசதியில் வைக்கலாம். ஒரே நேரத்தில் 2 பேரின் இறந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் அளவுக்கும், அதை மருத்துவ மாணவர்கள் சுற்றி நின்று குறிப்புகள் எடுத்து கொள்வதற்கும் இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், போலீசாருக்கு என தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.