தபால் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லையில் தபால் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
தபால் துறை நெல்லை முதுநிலை முதன்மை கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால்துறை வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. நெல்லை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தலைமை தாங்கினார். அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் குமரன், மக்கள் தொடர்பு அதிகாரி சபாபதி, வாடிக்கையாளர்கள் ஜமால் முகமது, வெங்கடாசலம், சீதாராமன், சங்கரநாராயணன், முருகன், கோபாலகிருஷ்ணன், நல்லபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அஞ்சல் சேவை பற்றியும், அதன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் நியூ காலனி நலச்சங்க நிர்வாகிகள், ஜவகர்நகர் பகுதிக்கு புதிய தபால் அலுவலகம் கட்டும் பணி தொடங்கியதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story