27-ந் தேதி அஞ்சல் குறைதீர்வு முகாம்


27-ந் தேதி  அஞ்சல் குறைதீர்வு முகாம்
x

திருப்பத்தூரில் அஞ்சல் குறைதீர்வு முகாம் 27-ந் தேதி நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அஞ்சல் குறைதீர்வு முகாம் 27-ந்் தேதி நடக்கிறது.

திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் குறைதீர்வு முகாம் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும். முகாமில் அஞ்சல் சேவை குறித்த புகார்களை தங்களது விவரங்களுடன் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பத்தூர் கோட்டம், திருப்பத்தூர்-635601 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், குறைதீர்வு முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகவும் பங்கேற்கலாம்.

இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story