ஆதார் சேவை- தபால் சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்


ஆதார் சேவை- தபால் சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்
x

பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சேவை மற்றும் தபால் சேமிப்பு கணக்கு தொடக்க முகாம் இன்று(வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது என தபால் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சேவை மற்றும் தபால் சேமிப்பு கணக்கு தொடக்க முகாம் இன்று(வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது என தபால் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.இது குறித்து பட்டுக்கோட்டை அஞ்சலக கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதார் சேவை

பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட பஞ்சநதிக்கோட்டை, தேத்தாக்குடி தெற்கு சேத்தி, புனல்வாசல் ஆகிய கிராமங்களில் கிராம பஞ்சாயத்து மற்றும் அஞ்சல் துறை இனைந்து நடத்தும் ஆதார் சேவை மற்றும் இதர சேமிப்பு கணக்குகளுக்கான முகாம் இன்று(வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.முகாமில் அஞ்சலக சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மகளிருக்காக மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மகளிர் மேன்மை திட்டம் (உயர்ந்த வட்டி விகிதம் கொண்ட இரண்டு வருட சேமிப்பு பத்திரம்) ஆதார்சேவைகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் துறையின் மூலம் வழங்கக்கூடிய இதர சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

திருத்தம்

எனவே இன்று முதல் 10-ந் தேதி வரை பஞ்சநதிக்கோட்டை தேத்தாக்குடி தெற்கு சேத்தி, புனல்வாசல் கிராமங்களில் சிறப்பு ஆதார் சேவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. முகாமில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் போன்ற சேவைகளும் செயல்படுத்தபட உள்ளன. எனவே பொதுமக்கள் தங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story