நெல்லை தபால்துறை ஊழியர் தேர்வு


நெல்லை தபால்துறை ஊழியர் தேர்வு
x

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு நெல்லை தபால்துறை ஊழியர் தேர்வு செய்யப்பட்டார்

திருநெல்வேலி

காமன்வெல்த் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலுதூக்கும் போட்டி நியூசிலாந்தில் வருகிற 28 -ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தபால் துறை நெல்லை கோட்டத்தை சேர்ந்த ஊழியர் சிவராமலிங்கம் இந்திய அணியின் சார்பாக கலந்து கொள்கிறார். அவரை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி, தொழிற்சங்க மாநில உதவி செயலாளர் ஜேக்கப்ராஜ் மற்றும் உதயகுமார் அருண்குமார், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். காமன்வெல்த் போட்டிக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்றது. இதில் சிவராமலிங்கம் வெற்றி பெற்று 120 கிலோ உடல் எடை பிரிவில் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணியின் சார்பாக தேர்வு பெற்றுள்ளார். மேலும் இவர் இந்திய வலுதூக்கும் அணிக்கு துணை கேப்டனாகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story