தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

திருச்சி

அஞ்சல்துறை தனியார்மயமாவதை தடுத்து நிறுத்த கோரி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த சம்மேளனங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தபால் ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்சி தலைமை தபால்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். டாக் மித்ரா திட்டம் மற்றும் பொதுசேவை மையம் என்ற பெயரில் அஞ்சல்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். துரித சேவை தபால் கடிதங்கள் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்வதற்கான நோடல் டெலிவரி மையங்கள் மற்றும் சென்ட்ரல் டெலிவரி மையங்களை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கிரிபாலன், குணசேகரன், கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 75 சதவீத ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்ததால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story