அஞ்சல் அட்டை வெளியீடு


அஞ்சல் அட்டை வெளியீடு
x

நெல்லை புதிய பஸ் நிலைய அறிவியல் பூங்கா குறித்த அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தபால்துறை மூலம் மேக்தூத் அஞ்சல் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் அட்டையை நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன், வணிக அதிகாரிகள் ராஜேந்திரபோஸ், வினோத், மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மேக்தூத் அஞ்சல் அட்டை ஒரு லட்சம் தயார் செய்யப்பட்டு நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 25 பைசா ஆகும்.


Next Story