ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள்


ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள்
x

புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே எதிரெதிர் கருத்துகளால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்களும், அவர்களது ஆதரவாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் உள்ளனர். இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தலைமை ஏற்க வா... என்ற ரீதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. தொண்டர் சுசீந்திரன் என்பவர் இன்று புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுதார். கட்சியை காப்பாற்றுங்கள் தலைவா, தெய்வமே என்று கதறினார். அவர் திடீரென சத்தமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலையிடம் ஒரு மனுவை வைத்தார். அதில் கட்சியை காப்பாற்றுங்கள் தலைவா தங்களின் பக்தன் கதறுகிறேன் என்று அவர் எழுதியிருக்கிறார். அ.தி.மு.க. தொண்டரின் செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.


Next Story