துப்புரவு பணியாளருக்கு பணி நியமன ஆணை


துப்புரவு பணியாளருக்கு பணி நியமன ஆணை
x
திருப்பூர்


முத்தூர் அருகே உள்ள ஊடையம், நகப்பாளையம் கிராமம், பகவதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணியன். இவர் முத்தூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த போது கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து பணிக்காலத்தில் மரணம் அடைந்த மணியன் மகன் முத்துசாமிக்கு வாரிசு அடிப்படையில் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு வழங்கியது.

இதனை தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பணி நியமன ஆணையை முத்துசாமிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர் மு.க.அப்பு, செயல் அலுவலர் வே.முருகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story