தபால் நிலைய அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


தபால் நிலைய அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

சேமிப்பு கணக்கு புகார் மீது நடவடிக்கை எடுக் காத தபால் நிலைய அதிகாரிக்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சேமிப்பு கணக்கு புகார் மீது நடவடிக்கை எடுக் காத தபால் நிலைய அதிகாரிக்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

தபால் நிலைய அதிகாரி

நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் கடந்த 2001-ம் ஆண்டு நாகர்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றினார். அப்போது அங்கு சேமிப்பு கணக்கு ஒன்றை அவரது பெயரில் ஆரம்பித்து வரவு செலவு நடத்தி வந்தார். பின்னர் அவர் வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவரால் சேமிப்பு கணக்கில் வரவு, செலவு நடத்த முடியவில்லை. 2015-ம் ஆண்டு சோமசுந்தரம் ஓய்வு பெற்றார்.

பின்னர் இலந்தையடி அருகே உள்ள புத்தளம் தபால் நிலையத்துக்கு தனது சேமிப்பு கணக்கை மாற்ற வேண்டி, 2017-ம் ஆண்டு சேமிப்பு கணக்கு புத்தகத்தை நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் சேமிப்பு கணக்கில் 2008-ம் ஆண்டு ரூ.1,248 இருப்பு தொகைக்கு பதில் ரூ.420.40 மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதுபற்றியும் தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு புகார் தெரிவித்தார்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சேமிப்பு கணக்கின் இருப்பு தொகையை சரி செய்து கொடுக்கும் நடவடிக்கையில் தலைமை தபால் நிலைய அதிகாரி ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி கடந்த 2019-ம் ஆண்டு சோமசுந்தரம் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளித்தார்.

புகார் மீது நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர்விசாரணை நடத்தினார். இதில் சேமிப்பு கணக்கினை சரிசெய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தபால் நிலைய அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், செலவு தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டனர்.


Next Story