முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வருவதால் அரசு நிழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20-ந்தேதி) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. அதேபோல், வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வந்தனர்.

முதல்-அமைச்சருக்கு காய்ச்சல்

இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் 2 நாட்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் மாற்று தேதி முறைப்படி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் காய்ச்சல் காரணமாக முதல்-அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.


Next Story