புன்னம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு


புன்னம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

புன்னம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கரூர்

புன்னம் ஊராட்சித்துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் புன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலரும், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலருமான பரமேஸ்வரன் தலைமையில் தொடங்கியது. இதில், புன்னம் ஊராட்சியில் உள்ள மொத்தம் 9 உறுப்பினர்களில் தி.மு.க.வை சேர்ந்த 1,4,5,7 ஆகிய வார்டுகளை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 2,3,8,9 ஆகிய வார்டு உறுப்பினர்களும், 6-வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் என 5 பேர் வரவில்லை. தி.மு.க. உறுப்பினர்களை தவிர மற்ற உறுப்பினர்கள் யாரும் வராததால் காலை 11 மணி அளவில் புன்னம் ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story