பொட்டல்காட்டு அரசு பள்ளியில்புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா


பொட்டல்காட்டு அரசு பள்ளியில்புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொட்டல்காட்டு அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

பொட்டல்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 புதிய வகுப்பறைகள் ரூ.41.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை வேலூரில் இருந்து, காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பஞ்சாயத்து யூனியன் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, மரிய ஜெயஷீலா, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செல்வி, மரிய ஜோஸ்பின் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிரேஸ் ஜெயந்தி ராஜகுமாரி நன்றி கூறினார்.


Next Story