தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை
தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை
மூலனூர்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் வாரந்தோறும் பிரதி வாரம் புதன்கிழமை அன்று காய்கறி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளான கிளாங்குண்டல், பெரமியம், காளிபாளையம், தூரம்பாடி, கன்னிவாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இருந்து பயிரிடப்பட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். மேலும் இந்த சந்தையில் மளிகை பொருட்கள், விவசாய கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும். தற்போது இந்த வாரம் தக்காளி வரத்து அதிகமானதால் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மூலனூர் வார சந்தையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோ 1-க்கு):-
தக்காளி ரூ.15-க்கும், வெங்காயம் ரூ.70-க்கும், கேரட் ரூ.60-க்கும், பீன்ஸ் ரூ.90-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், கத்திரிக்காய் ரூ.40-க்கும் முட்டைகோஸ் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
---