மண்பாண்ட தொழிலாளி தற்கொலை
வடமதுரையில், மண்பாண்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்
வடமதுரை மேற்கு ரதவீதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 25). மண்பாண்ட தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜ்குமார் சம்பவத்தன்று விஷத்தை குடித்தார். இதில், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story