கோழி பண்ணையில் தீ விபத்து


கோழி பண்ணையில் தீ விபத்து
x

குடியாத்தம் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான குஞ்சுகள் கருகியது.

வேலூர்

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். கோழி பண்ணை நடத்தி வருகிறார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு 4,700 கோழி குஞ்சுகளை கொண்டு வந்து வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலையில் திடீரென கோழிப் பண்ணையில் தீ பற்றி உள்ளது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் பண்ணையிலிருந்த 4,700 கோழி குஞ்சுகளும் எரிந்து கருகியது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story