கோழி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


கோழி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கோழி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்வம்(வயது 60). இவர் வெள்ளியணை வடக்கு பகுதியில் கோழி கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து கடைக்கு வந்த செல்வம் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story