கோழி கடைக்காரர் விபத்தில் பலி
சேலம்
சூரமங்கலம்:-
சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 50). இவர் சேலம் தாதகாப்பட்டியில் கோழி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பிரேக் போட்டதில் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story