கோழி வியாபாரி மர்ம சாவு


கோழி வியாபாரி மர்ம சாவு
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கோழி வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தேனி

கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் இருளாண்டி (வயது 51). இவருக்கு வீரபாண்டியன் (27), வீரமணி (25) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் வாரச்சந்தையில் கோழி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வீரமணி வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கம்பம் புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள காலி இடத்தில் வீரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வீரமணி எப்படி இறந்தார்? என்பது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வீரமணிக்கு சங்கவி என்ற மனைவியும், துர்கேஸ்வரன், சக்தீஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story