காடமங்கலம் கிராமத்தில் மின்குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு


காடமங்கலம் கிராமத்தில் மின்குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக காடமங்கலம் கிராமத்தில் மின்குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மின் ஒயர்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றன. இதனால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகின. மின் ஒயர்கள் தாழ்வாக சென்றன. இதனால் மாணவ- மாணவிகள் பொதுமக்கள் நடக்க முடியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து காடமங்கலம் கிராமத்தினர் பெருநாழி போஸ் தலைமையில் உண்ணா விரதம் இருப்பதாக முடிவுசெய்தனர். காடமங்கலம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்து தினத்தந்தியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக மின்சார வாரிய அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்ட மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் ராஜேஸ்வரி, பரமக்குடி செயற்பொறியாளர் ரெஜினா ராஜ்குமார், கமுதி மின்சாரத்துறை உதவி பொறியாளர் விஜயன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 40-க்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். 10 மின்கம்பங்கள் மற்றும் மின்ஒயர்கள் பழுதான மின் ஒயர்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டு மின்சார வாரியம் மற்றும் தினத்தந்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story