மின்தடை


மின்தடை
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் மின்தடை

நாகப்பட்டினம்

வேதாரண்யம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பருவ மழை முன்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையம் ஆகிவற்றில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி இந்த மின் பாதைகள் மூலமாக மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆதனூர், அண்டர்காடு, புஷ்கரணி, நெய்விளக்கு, ராமர் பாதம், தகட்டூர், தென்னடார், பஞ்சநதிக்குளம், தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், கீழவாடிக்காடு, இடும்பாவனம், புதுப்பள்ளி, காமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.


Next Story