உவரி, இட்டமொழி பகுதியில் 23-ந் தேதி மின்தடை
உவரி, இட்டமொழி பகுதியில் 23-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் மற்றும் நவ்வலடி துணை மின் நிலையங்களில் 23-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் நவ்வலடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை வள்ளியூர் மின் வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story