கூடங்குளம் பகுதியில் 28-ந்தேதி மின்தடை
கூடங்குளம் பகுதியில் 28-ந்தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுரம், சிதம்பரபுரம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு, பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story