செம்பட்டி, எழுவனம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


செம்பட்டி, எழுவனம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

செம்பட்டி, எழுவனம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

செம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் அணை பகுதிகள், பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி, அம்பாத்துரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செம்பட்டி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.

இதேபோல் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி எழுவனம்பட்டி, வெரியப்பன் நாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி, உச்சப்பட்டி, கருப்பமூப்பன்பட்டி, தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.


Next Story