தாமரைப்பாடி, நல்லமனார்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை


தாமரைப்பாடி, நல்லமனார்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை
x

தாமரைப்பாடி, நல்லமனார்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி குளத்தூர், சூடாமணிபட்டி, காளனம்பட்டி, புலியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவபட்டி, சுந்தரபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story