மதுராபுரி பகுதியில் 2 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் 2 நாட்கள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனி
பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி மதுராபுரி, பெரியகுளம்-தேனி மெயின் சாலை பகுதி (மதுராபுரி), அன்னஞ்சி, கோம்பை, அனுகிரகாநகர், மணிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story