திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் 10-ந் தேதி மின்தடை


திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் 10-ந் தேதி மின்தடை
x

திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் 10-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம், திசையன்விளை மற்றும் வள்ளியூர் துணை மின்நிலையங்களில் 10-ந் தேதி(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வள்ளியூர் மின் வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.


Next Story