குமாரபுரம் பகுதிகளில் 15-ந் தேதி மின்தடை


குமாரபுரம் பகுதிகளில் 15-ந் தேதி மின்தடை
x

குமாரபுரம் பகுதிகளில் 15-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் குமாரபுரம், புதியம்புத்தூர், மதகனேரி, மாறநாடார் குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்திரலிங்கபுரம் மற்றும் இங்கிருந்து மின்னோட்டம் பெறும் காற்றாலை பண்ணைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வடக்கன்குளம் காற்றாலை மின்பண்ணை குழும உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story