சிவகங்கை, சிங்கம்புணரி பகுதிகளில் இன்று மின்தடை


சிவகங்கை, சிங்கம்புணரி பகுதிகளில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை,சிங்கம்புணரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை


பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை,சிங்கம்புணரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை நகர், மேலூர் ரோடு, ராம்நகர், கொட்டக்குடி, லட்சுமண்நகர், மீனாட்சி நகர், பெருமாள் கோவில் வீதி, நெல்மண்டி தெரு, வ.உ.சி.ரோடு, சரோஜினி தெரு, மேலரத வீதி, பஸ் ஸ்டாண்ட், நேரு பஜார், இளையான்குடி ரோடு, இந்திரா நகர், மதுரை முக்கு, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், பையூர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாபட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள்பட்டி, சோழபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.

சிங்கம்புணரி

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி மற்றும் காளாப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே சிங்கம்புணரி நகர், கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கை பட்டி, செருதப்பட்டி, என்பீல்டு பகுதிகள். அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.வி. மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, வேங்கைபட்டி, வையாபுரி பட்டி, செல்லியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்்தார்.


Next Story