காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
காரைக்குடி
காரைக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய திறன் மின்மாற்றி அமைப்பதற்கான வேலைகள் நடைபெறுகிறது. எனவே காரைக்குடி நகர் பகுதிகள், செக்காலை கோட்டை, மன்னர் நகர், பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை. புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.
இளையான்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, சேத்தூர், கருஞ்சுத்தி, நகரகுடி, குமாரக்குறிச்சி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்து உள்ளார்.