பலத்த மழையால் 3 மணி நேரம் மின் தடை


பலத்த மழையால் 3 மணி நேரம் மின் தடை
x

ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழையால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழையால் ஏலகிரி கிராமத்தில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் மின் வினியோகம் தடைபட்டது.

திடீரென கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மணிக்கணக்கில் காத்து நின்று பயணித்தனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story