முன் அறிவிப்பு இன்றி கிராமங்களில் மின்தடை


முன் அறிவிப்பு இன்றி கிராமங்களில் மின்தடை
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன் அறிவிப்பு இன்றி கிராமங்களில் மின்தடை

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி தாலுகாவில் உள்ள கிராமப்புறங்களில் அடிக்கடி மின் தடை இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இதே பிரச்சினை நகர்புறங்களில் இருந்து வந்த நிலையில் அசோகன் எம்.எல்.ஏ. முயற்சியில் தற்போது நகர்புறத்தில் மின் தடை இல்லாத நிலையில் சிவகாசி தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாத நிலையில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தம் செய்யும் போது மட்டும் மின்வாரியம் சார்பில் அறிவிப்பு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஒரு சில கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பாதிப்பு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மின்சார வாரியம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story