மங்கலத்தில் நாளை மின்நிறுத்தம்


மங்கலத்தில் நாளை மின்நிறுத்தம்
x

மங்கலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.


Next Story