திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம்


திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம்
x

திருவண்ணாமலையில் நாளை (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வடஆண்டாப்பட்டு, வடஅரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அதேபோல் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் (மேற்கு) பக்தவச்சலன் தெரிவித்து உள்ளார்.


Next Story