லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி


லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி
x
தினத்தந்தி 17 Oct 2022 10:37 PM IST (Updated: 17 Oct 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும். நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 117 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,300 கனஅடியில் இருந்து 511 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தலா 23 மெகாவாட் வீதம் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.25 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 727 கன அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story