தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்


தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரயாம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

பேரயாம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேரயாம்பட்டு கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பிகள் அதிகளவில் தாழ்வாக செல்கிறது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மின் கம்பிகளால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.

மழைக்காலங்களில் மின் அதிர்ச்சியும் ஏற்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வருகின்றனர்.

மரக்கம்புகள்

இந்த நிலையில் பேரயாம்பட்டு கிழக்குத்தெரு, கோவில் பகுதி மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் தாழ்வாக மின் கம்பியில் செல்வதால் அதனை அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மரக்கம்புகளைக் கொண்டு தூக்கி கட்டி வைக்கப்பட்டு உள்ளனர்.

சில நேரங்களில் காற்று அடித்தால் மரக்கம்புகள் உடைந்து கீழே விழுகிறது. இதனால் மின் கம்பிகள் இருப்பது தெரியாமல் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story