விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

ராஜபாளையம் அருேக விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து வழக்கம்போல் பணிகள் தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருேக விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து வழக்கம்போல் பணிகள் தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போராட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இங்கு தறி ஓட்டும் தொழில் மற்றும் வைண்டிங் தொழிலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூற்றுக்கணக்கான சிறு விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு இரு மடங்கு கூலி உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் 3 மடங்கு கூலி உயர்வு வேண்டும் என கோரி தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் மகிழ்ச்சி
இந்தநிலையில் நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலையில் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 16 ஊடை கொண்ட 16 மீட்டர் துணி உற்பத்திக்கு இந்த வருடம் ரூ.26.64-ம், அடுத்த வருடம் ரூ.28.08-ம், 3-ம் ஆண்டு ரூ.29.52 உயர்வும் வழங்கப்படும் என வட்டாட்சியர் முன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அனைத்து விசைத்தறிகளும் நேற்று முதல் இயங்கின. இதனால் தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.