மின்நிறுத்தம்
ேபரளம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவாரூர்
பேரளம், அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், பூந்தோட்டம், அதம்பார், விலாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கட்டாரம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூர், முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பேரளம் உதவி செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story