பொம்மிடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பொம்மிடி பகுதியில்   இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பொம்மிடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கே.மோரூர், கண்ணப்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டரஅள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story