பராமரிப்பு பணிகள்: விரகனூர், நாவலர் நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக விரகனூர், நாவலர் நகர் பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணிகள் காரணமாக விரகனூர், நாவலர் நகர் பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
மதுரை வண்டியூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட விரகனூர் மின்னழுத்த பாதையில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எல்.கே.டி. நகர், விரகனூர், கோழிமேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
மதுரை அரசரடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இன்டஸ்டீரியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு மற்றும் மர கிளைகள் வெட்டும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சொக்கலிங்க நகர் தெருக்கள், ஜவகர் மெயின்ரோடு, வடக்கு பார்த்தசாரதி தெரு, பைபாஸ் ரோடு, நாவலர் நகர், பாரதியார் மெயின்ரோடு, அவனியுத் தெரு, டி.எஸ்.பி. நகர் ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அவனியாபுரம்
அதேபோல அவனியாபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மல்லிகை வீடுகள், பைபாஸ்ரோடு, பீகாக் சிட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.