மின் நிறுத்தம்


மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி, பொறையாறு பகுதியில் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார், கருவி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.


Next Story