ஆனையூர், அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஆனையூர், அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனையூர், அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை

வாடிப்பட்டி,

ஆனையூர், அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் ராயபுரம் பீடர், அலங்காநல்லூர் துணைமின் நிலையத்தில் தேசிய சர்க்கரை ஆலை பீடர், ஆணையூர் துணை மின் நிலையத்தில் பூதக்குடி பீடர்களில் நாளை(செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிக்கந்தர் சாவடி, பி.ஆர்.சி. காலனி, பாசிங்காபுரம், வாகைகுளம், பூதங்குடி, விஷால் நகர், இ.எம்.டி. நகர், குமாரம், வடுகபட்டி, அரியூர், கோவில் பாப்பாக்குடி, கீழநெடுங்குளம், தேசிய சர்க்கரை ஆலை, டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேதான், நெடுங்குளம், ஆண்டிபட்டிங்களா பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் நிறுத்தம்

அதேபோல் ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்கநகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக்நகர், புது விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின்ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி பிரிவு, லெட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story