தூத்துக்குடி, வல்லநாடு பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்


தூத்துக்குடி, வல்லநாடு பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x

தூத்துக்குடி, வல்லநாடு பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மின்தடை

இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி திரேஸ்நகர், காமராஜ்நகர், பாரதிநகர், குமரன்நகர், நந்தகோபாலபுரம், அழகேசபுரம், தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, செல்வீஜர் தெரு, சிவன் கோவில் ரதவீதிகள், பெருமாள் கோவில் தெரு, வ.உ.சி. சாலை, கிப்சன்புரம், ரெங்கநாதபுரம், ரஹ்மத்துல்லாபுரம், எட்டையாபுரம் ரோடு, பி.ஆர்.நகர், வளைவு ரோடு, சிவன் கோவில் கிழக்கு, வடக்கு காட்டன்ரோடு, டபிள்யூ.ஜி.சி.ரோடு மற்றும் பீச்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

முத்தையாபுரம் பகுதி

இதே போன்று, சிப்காட் அருகே உள்ள மடத்தூர், மடத்தூர் பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், முத்து நகர், பசும்பொன் நகர், தபால் தந்தி காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், முத்தையாபுரம் அருகே உள்ள அபிராமி நகர், முள்ளக்காடு, பாலாஜி நகர், தேவி நகர், பொட்டல்காடு, ஆதிபராசக்தி நகர், கீதா நகர், திருச்செந்தூர் மெயின் ரோடு, அய்யன் கோவில் தெரு, சூசை நகர், ஜே எஸ் நகர், சுந்தர் நகர், பாரதி நகர், எழில் நகர், குமாரசாமி நகர், அம்பேத்கார் நகர், அத்திமரப்பட்டி, பொன்னான்டி நகர், கிருஷ்ணாநகர், வீர நாயக்கன் தட்டு, காலாங்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், ஒட்டநத்தம் அருகே உள்ள சண்முகபுரம், பாண்டியாபுரம், மணியாச்சி, பாறைக்குட்டம், வடமலாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, வீரன்சுந்தரலிங்கநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

வல்லநாடு

மேலும் தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வல்லநாடு துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அனந்த நம்பிகுறிச்சி, எல்லநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன் புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story