புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம்
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் தாவூது மில் (திருச்சி ரோடு), ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், முத்துடையான்பட்டி, கிளியூர், வடசேரிப்பட்டி, வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலகாயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன்நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம்நகர், ஜீவா நகர், விஸ்வகர்மா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story